நிறம் மாறிய நிலத்தடி நீர்- பொதுமக்கள் அதிர்ச்சி

பல வீடுகளில் ஆழ்துளை கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் பல்வேறு நேரங்களில் பல்வேறு வண்ணங்களில் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
நிறம் மாறிய நிலத்தடி நீர்- பொதுமக்கள் அதிர்ச்சி
Published on: 
Summary

சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தடி நீர் மாசடைந்து வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் இன்று காலை தனது வீட்டு உபயோகத்திற்காக அவர் வீட்டில் இருந்த ஆழ்துளை கிணற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்தார். அப்போது குழாயில் தண்ணீர் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

ஆழ்துளை கிணறு

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் தேரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஆழ்துளை கிணற்றில் சிவப்பு நிறத்தில் கொட்டிய தண்ணீரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இப்பகுதியில் பல வீடுகளில் ஆழ்துளை கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் பல்வேறு நேரங்களில் பல்வேறு வண்ணங்களில் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்

இப்பகுதி எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் அரசு அனுமதியின்றி பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் சாயப்பட்டறைகள் செயல்படுவதாகவும் அவ்வாறு செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை சிலர் சாக்கடை கால்வாய்களிலும் பல நிறுவனங்கள் அப்பகுதியில் உள்ள வறண்ட ஆழ்துளை கிணறுகளிலும் விட்டுவிடுவதாக கூறப்படுகிறது.

ஆரோக்கிய குறைபாடு

அவ்வாறு வெளியேற்றப்படும் சாயக்கழிவுகள் சுற்று வட்டார பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் கலந்து தண்ணீர் மாசடைந்து பல்வேறு நிறங்களில் வெளிவருவதாகவும் இதனால் இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.

நிலத்தடி நீர்

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தடி நீர் மாசடைந்து வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

X