ராமேசுவரம்-தாம்பரம் ரெயிலில் மான் குறுக்கே பாய்ந்ததால் என்ஜினில் கொம்பு சிக்கி பழுதாகி நின்றது

தாம்பரம் செல்ல வேண்டிய பயணிகள் வெகு நேரம் குழந்தைகளுடன் அவதியடைந்தனர்.
ரெயில் என்ஜினில் மோதிய மானின் கொம்பு சிக்கி இருந்த காட்சி
ரெயில் என்ஜினில் மோதிய மானின் கொம்பு சிக்கி இருந்த காட்சி
Published on: 
Summary

மான் ரெயில் என்ஜினின் வேகத்தில் அதன் கொம்பை கிழித்து சென்றுள்ளது. மான் உயிருடன் தப்பித்து விட்ட நிலையில் மானின் கொம்பு சிக்கியதால் என்ஜினில் பழுது ஏற்பட்டது.

ராமேசுவரத்தில் இருந்து தாம்பரத்திற்கு தினமும் மாலை 6 மணிக்கு போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ரெயில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ராமேசுவரம்-தாம்பரம் போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் ெரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை 6 மணிக்கு புறப்பட்டது. அந்த ரெயில் மானாமதுரை ெரயில் நிலையத்திற்கு இரவு 7.45 மணிக்கு வந்து பயணிகள் ஏறி, இறங்கிய பின்னர் சரியாக 7.50 மணிக்கு கிளம்பி சென்று கொண்டிருந்தது.

ரெயில்

அப்போது போது மானாமதுரை அருகே மேலகொன்னக்குளம் ரெயில் நிலையம் பகுதியில் மான் ஒன்று குறுக்கே சென்றுள்ளது. அத்துடன் அந்த மான் ரெயில் என்ஜினின் வேகத்தில் அதன் கொம்பை கிழித்து சென்றுள்ளது. மான் உயிருடன் தப்பித்து விட்ட நிலையில் மானின் கொம்பு சிக்கியதால் என்ஜினில் பழுது ஏற்பட்டது.

இதன் காரணமாக சுமார் இரண்டரை மணி நேரத் திற்கும் மேலாக ரெயில் நிறுத்தப்பட்டு காரைக்குடியில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து பழுதான என்ஜினுடன் இணைக்கப்பட்டு இரவு 10.45 மணிக்கு சிவகங்கை நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் தாம்பரம் செல்ல வேண்டிய பயணிகள் வெகு நேரம் குழந்தைகளுடன் அவதியடைந்தனர்.

X