தீபாவளி பண்டிகை - தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீயணைப்பு, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம்.
பட்டாசு கடை
Published on: 
Summary

தமிழ்நாடு முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு இதுவரை 12,098 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், 10 ஆயிரத்து 244 விண்ணப்பங்களுக்கு தீயணைப்புத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இதற்கு தீயணைப்பு, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம். இதில் தீயணைப்பு துறையின் சான்றிதழ் கிடைத்த பின்னரே பிற துறைகளிடம் இருந்து சான்றிதழ் பெற முடியும்.

அந்தவகையில் நடப்பாண்டில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடை வைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் கோரி தீயணைப்பு துறைக்கு தமிழ்நாடு முழுவதும் இதுவரை 12,098 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், 10 ஆயிரத்து 244 விண்ணப்பங்களுக்கு தீயணைப்புத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கி இருப்பதாக அத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அந்த அதிகாரி கூறும்போது, 'தற்போது வரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் 940 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 914 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

X