தீபாவளி கொண்டாட்டம் - தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்ததில் 1116 பேருக்கு தீக்காயம்

சென்னையில் பட்டாசு வெடிவிபத்தில் 18 குழந்தைகளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
தீபாவளி கொண்டாட்டம் - தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்ததில் 1116 பேருக்கு தீக்காயம்
Published on: 
Summary

தீபாவளி கொண்டாட்டத்தின்போது தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்ததில் 1116 பேர் காயம் அடைந்தனர். சென்னையில் மட்டும் 55 பேர் லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தில் பெரிய அளவில் பட்டாசு விபத்து உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்ததால் பட்டாசு விபத்தால் பாதிப்பு இல்லை.

நேற்று முன்தினம் இரவை விட நேற்று இரவில்தான் பட்டாசு சத்தம் காதைப் பிளந்தது. மதியத்திற்குப் பிறகு மழை பெய்யாததால் உற்சாகமாக சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் பட்டாசு கொளுத்தினார்கள்.

பட்டாசு வெடிவிபத்து

பட்டாசு வெடிவிபத்து தொடர்பாக தமிழகம் முழுவதும் 116 அழைப்புகள் தீயணைப்பு நிலையத்திற்கு வந்தன. இதில் ராக்கெட் தீ விபத்து தொடர்பாக 65 போன் அழைப்புகள் வந்துள்ளர்.

தீபாவளி வெடிவிபத்து

தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்ததில் 1116 பேர் காயம் அடைந்தனர். சென்னையில் மட்டும் 55 பேர் லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதில் 985 பேர் லேசான தீக்காயத்திற்கு சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினர். 131 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 290 குழந்தைகள், 597 ஆண்கள், 98 பெண்கள் ஆவார்கள். சென்னையில் பட்டாசு வெடிவிபத்தில் 18 குழந்தைகளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

தீயணைப்புத் துறை வீரர்கள் இரவு- பகலாக உஷார்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தீ விபத்து குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த தீபாவளி வெடி விபத்து பாதிப்பு குறைவாக பதிவாகி உள்ளது.

சென்னை மண்டலத்தில் 813 வீரர்களும், வெளி மாவட்டங்களில் இருந்து 316 பேரும் தீபாவளி பண்டிகை கால பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

X