

அனைத்து பொதுமக்களும் தீபாவளியை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை தீபாவளி திருநாளை முன்னிட்டு முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 27-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுடன் இணைந்து 108 அவசர சேவை 24 மணி நேரமும் பொதுமக்கள் நலனுக்காக முழு தயார் நிலையில் உள்ளது.
அவசர தேவைக்கேற்ப திடீர் நடவடிக்கை எடுக்கவும், ஹாட்ஸ்பாட் சாலைகளின் தன்மைகளை கருத்தில் கொண்டு ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னெச்சரிக்கை அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளன. சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இருவரும் முழுத் தயார்நிலையில் உள்ளனர்.
மேலும், அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் தீயணைக்கப் பயன்படும் கருவிகள், மீட்பு உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் அவசர மருந்துப்பொருட்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பொதுமக்களும் தீபாவளியை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.