காட்டுமன்னார்கோவில் அருகே கர்ப்பிணி பெண் திடீர் உயிரிழப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே கர்ப்பிணி பெண் திடீர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே கர்ப்பிணி பெண் திடீர் உயிரிழப்பு
Published on: 
Summary

இறந்த ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் செர்ப்பனஞ்சேரி அடுத்த நாவலூரை சேர்ந்த குப்பன்-செல்வி தம்பதியின் மகள் ரஞ்சிதா(வயது22).

இவர் சென்னையில் டிப்ளமோ நர்சிங் படித்தபோது, அதே பகுதியில் வேலை பார்த்து வந்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழப்பருத்திகுடி கிராமத்தை சேர்ந்த கார் டிரைவரான பிரகதீஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

திருமணம்

பின்னர் அந்த பழக்கம் காதலாகி மாறி 2 பேரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

பின்னர் பிரகதீஷ்குமார் தனது மனைவியுடன் சொந்த ஊரில் வசித்து வந்தார். தற்போது ரஞ்சிதா 5 மாத கர்ப்பமாக இருந்தார். நேற்று பிரகதீஷ்குமார் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அவரது தாயாரும் வேலைக்கு சென்று விட்டார். அவர் வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது, ரஞ்சிதா எந்தவித அசைவும் இன்றி இறந்த நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியான அவர் மகனுக்கு தகவல் கொடுத்தார். மேலும் இளம்பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தார்.

விசாரணை

இதுகுறித்து ரஞ்சிதாவின் தாய் செல்வி குமராட்சி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் இறந்த ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com