

கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழித்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு செல்லும் நிதியுதவியை தடுத்தல், முறையான மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு, மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தது.
இதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு, புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்காக பொதுமக்கள் சந்தித்த துயரங்கள் ஏராளம். மணிகணக்கில் ஏ.டி.எம்.எந்திரங்களின் முன்பும், வங்கிகளின் முன்பும் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.
பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை இன்னும் சிலர் கைவசம் வைத்திருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருவதை பார்க்கமுடிகிறது. வீடுகளில் எப்போதோ சேமிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்ட பணம், காலாவதியான பிறகு கத்தை, கத்தையாக கண்டுபிடிக்கப்படுகிறது.
இதை மாற்றி தங்களுடைய அவசர தேவைக்காக பயன்படுத்தமுடியாமல் திணறி வருகின்றனர்.
பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை இன்றும் ஒரு சிலர் அவற்றை காட்சி பொருளாக வைத்திருக்கிறார்கள்.