குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

கொடியேற்றப்பட்டதும் விரதமிருக்கும் பக்தர்கள் காப்புக் கட்டிக் கொண்டனர்.
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடி ஏற்றம்
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடி ஏற்றம்
Published on: 

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று அதிகாலையில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காளி பூஜை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று அதிகாலையில் கொடிப்பட்டம் வீதி உலா சென்று கோவிலுக்கு வந்த பின்னர் 5 மணியளவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் விரதமிருக்கும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர்.

விழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

10-ம் திருநாளான வருகிற 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

காளி பூஜை

முன்னதாக நேற்று காளி பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடந்தது. காலையில் விநாயகர் பூஜை, சிறப்பு அபிேஷகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. 108 சங்கு பூஜை, 108 கலச பூஜையை தொடர்ந்து முத்தாரம்மனுக்கு காளி பூஜை நடைபெற்றது.

அம்மனுக்கு காப்பு

இதில் காளி வேடம் அணிவதற்காக விரதமிருக்கும் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரத்தை தொடர்ந்து அன்னபூஜை நடைபெற்றது.

மாலையில் சுவாமி- அம்மனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அலங் கார காளி பூஜை தீபாராதனை நடைபெற்றது. இரவில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com