

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதன் மூலம் புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவி ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதன் மூலம் புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.