

தமிழகத்தில் மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனால் கடந்த 1 வாரமாகவே மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர்.
தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடலில் நிலவும் ‘அக்வான்’ புயல், மெதுவாக வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது வடக்கு-வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 145 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனால் தமிழகத்தில் மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனால் கடந்த 1 வாரமாகவே மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலும் கடற்கரை கிராமங்களான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை இடிந்தகரை, கூத்தன் குழி, கூட்டப்புளி, பஞ்சல், தோமையர்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராம மக்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர். அவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீன்வளத்துறை அதிகார்கள் எச்சரித்து உள்ளதால் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.