கரையை கடக்கும் அர்னாப் புயல் - சென்னை திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம்!

கடந்த 6 மணிநேரமாக புயல் மேற்குநோக்கி நகர்ந்து வருகிறது.
கரையை கடக்கும் அர்னாப் புயல் - சென்னை திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம்!
Published on: 

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் ஆந்திராவில் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகளில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரைப் பகுதியில் திடீரென அலைகள் பாதுகாப்புத் தடுப்பைத் தாண்டி, அங்குள்ள சாலைகளில் புகுந்துள்ளது.

தடுப்பை தாண்டிய கடல்நீர் சாலைகளில் சூழ்ந்துள்ளதால், அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

அலை வந்த வேகத்திற்கு அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் நீரால் அடித்துச் செல்லப்பட்டு கவிழ்ந்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com