அரசை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என வைகோ எங்களைப் பார்த்து கேட்கக்கூடாது- பெ. சண்முகம்

எங்களை பொறுத்தவரை மக்களுக்கு சாதகமான திட்டங்கனை தீட்டினால், நிறைவேற்றினால் வரவேற்போம்.
வைகோ- பெ சண்முகம்
வைகோ- பெ சண்முகம்
Published on: 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆளுங்கட்சியின் அமைச்சரவையில் உள்ள இரண்டு கட்சிகள் காலையில் எழுந்த உடனேயே த.வெ.க. அரசை குறை கூறுவதை ஒரு வேலையாக வைத்துள்ளனர் எனப் பேசியிருந்தார்.

இது தொடர்பாக பெ. சண்முகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:-

அது மதிமுக-வின் அரசியல் அணுகுமுறையாக இருக்கலாம். எங்களை பொறுத்தவரை அவர்கள் மக்களுக்கு சாதகமான திட்டங்கனை தீட்டினால், நிறைவேற்றினால் வரவேற்போம். எதிரானது என்றால் வெளிப்படையாக பளிச்சென்று எங்களது கருத்துகளை தெரிவிப்போம். இது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு.

மதிமுக என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ, அதை நாங்களும் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது அவருடைய தவறு. நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில் இது சரி, தவறு என சுட்டிக்காட்டினால் விளக்கங்களை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

வைகோ பேசுவது பொருத்தமல்ல

நாங்கள் எழுப்பக்கூடிய பிரச்சினையை பற்றி கவலைப்படாமல், வைகோ போன்ற மூத்த அரசியல்வாதிகள் கேள்வி கேட்பது பொருத்தமல்ல. அது அவருடைய கட்சி அணுமுறை என்றால் அவர்கள் அவ்வாறு கொள்ள வேண்டும். நீங்கள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்ற எங்களை பார்த்து கேள்வி கேட்கக்கூடாது.

இவ்வாறு பெ. சண்முகம் தெரிவித்தார்.

X