தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஞாயிறு தோறும் தமிழக சுகாதார துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.30-ந்தேதிக்கு பிறகு பூஸ்டர் டோஸ் போட வேண்டுமானால் ரூ.386.25 கட்டணத்தில்தான் தடுப்பூசி போட வேண்டியிருக்கும்.
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
Published on

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பல்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதுவரை 35 மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்று 36-வது சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள், மாவட்ட மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்கள் தடுப்பூசி போடப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த காலக்கெடு வருகிற 30-ந்தேதியுடன் முடிகிறது.

இதனால் இந்த மாதம் ஞாயிறு தோறும் தமிழக சுகாதார துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாதம் 30-ந்தேதிக்கு பிறகு பூஸ்டர் டோஸ் போட வேண்டுமானால் ரூ.386.25 கட்டணத்தில்தான் தடுப்பூசி போட வேண்டியிருக்கும்.

இதனால் இலவச வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com