

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட மூவரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்று தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டதாகப் பதிவான வழக்கில், ஆறுக்கும் மேற்பட்டோரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் அன்பில் மகேஸ், முக்கிய குற்றவாளி முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோரை நேற்று, இன்று (நவ.25, 26) என இரண்டு நாட்கள் காவலில் எடுத்து சிசிபி விசாரணை நடத்தியது.
காவல் விசாரணை முடிந்த நிலையில், மூவரும் இன்று ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் டிசம்பர் 2-ஆம் தேதி வரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஸ், சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அன்பில் மகேஸின் ஜாமின் மனு நாளை (நவ.27) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.