சர்ச்சை பேச்சு - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது

ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Udhayanidhi Stalin
Published on

நீலாங்கரை இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

திமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியதையடுத்து நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இதற்கிடையே, ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை ஐகோர்ட்

தஞ்சை காவல்துறை உதயநிதியை கைது செய்ய முனைப்பு காட்டிவரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் உதயநிதி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்று நண்பகல் 12 மணிக்கு விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். மதியம் 12 மணி வரை உதயநிதி விவகாரத்தில் நடவடிக்கை வேண்டாம் எனவும் காவல்துறையிடம் தெரிவிக்க நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கைது

இந்நிலையில் நீலாங்கரை இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதியை கைது செய்து தஞ்சை மாவட்ட காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

முதலமைச்சர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நண்பகல் 12 மணி வரை கைது செய்ய வேண்டாம் என ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்திய நிலையில் உதயநிதி கைது செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com