நடிகை குறித்து சர்ச்சை பேச்சு - உதயநிதிமீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

நடிகை குறித்தப் பேச்சுக்கு உதயநிதி விளக்கம் மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்புகோர உத்தரவிட வலியுறுத்தி தேசிய மகளிர் ஆணையத்திடம் தவெக மனு.
நடிகை குறித்து சர்ச்சை பேச்சு - உதயநிதிமீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!
Published on

தஞ்சாவூரில் ஆக.3ம் தேதி நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது நடிகை ஒருவர் குறித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.

இதுதொடர்பாக பல்வேறு பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தஞ்சாவூர் காவல்துறை அவரை கைதும் செய்து, பின்னர் விடுவித்தது.

இதனைத்தொடர்ந்து தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் செல்வகுமார் இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகார் மனுவில் நடிகை குறித்தப் பேச்சுக்கு உதயநிதி விளக்கம் மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்புகோர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

மேலும் அவர்மீது உரிய சட்ட நடவடிக்கைகளை தொடங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்நிலையில் உதயநிதிமீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைந்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com