ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
Published on: 
Summary

தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன்பு இன்று பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உழைப்போர் உரிமை இயக்கம் ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் விருத்தாசலம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணிபுரியும் 113 பேர் கடந்த 14 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

நகராட்சி அலுவலகம்

இந்நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்த தொகையை வழங்கிட வேண்டும். இ.எஸ்.ஐ. அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அடிப்படை உபகரணங்கள் வழங்க வேண்டும். உணவுப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை 6 மணி முதல் பணியை புறக்கணித்து மணிமுத்து தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

இதில் ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட பொறுப்பாளர் ராஜசங்கர், சி.பி.எம்.எல். மாநிலக்குழு உறுப்பினர் தனவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மனோகர், சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கீதா முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் நாகராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்ற தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com