இடைத்தரகர்கள் செலவினம், ஊழல் முற்றிலும் தடுப்பு..!- தவெக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட நிதியமைச்சர்

மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
Minister Maria Wilson
Published on

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலுரை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வெற்றி அடைவதற்கு குறுக்கு வழியை அடையாமல் உண்மையுடன் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு முதல்வரே எடுத்துக்காட்டு.

அன்றும் இன்றும் என்றும் உண்மைக்கு புறம்பாக தவெகவினர் பேசுவதில்லை.

30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு முதல்வர் விஜய் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.

குறிவைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்க மாட்டேன் என்ற எம்ஜிஆர் வசனத்தை ரீ-டிரெண்ட் செய்து சாதித்தவர் முதல்வர்.

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் பாடலுக்கு முதல்வரே உதாரணம்.

எங்கள் தவறை திருத்தி உங்களிடம் இருந்து சிலவற்றை கற்றுக்கொண்டு மீண்டும் வலிமையாக நாங்கள் வருவோம்.

தமிழ் மொழி விவகாரத்தில் அன்று ஆவேசப்பட்டு விட்டேன். முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும் என்னையும் ஒப்பிட்டு பேசினார்கள்.

நான் பிறந்தது திருவாரூர், வளர்ந்தது புதுச்சேரி, படித்தது சென்னை, தற்போது ஆர்.கே.நகர் தத்தெடுத்துள்ளது.

வெற்றி பட்ஜெட்

இடைத்தரகர்களுக்கு சென்ற வீணான செலவினம் தவெக அரசில் நிறுத்திவைப்பு. மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும். எந்த பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி திட்டமும் நிறுத்தப்படவில்லை.

நடைமுறை திட்டங்கள் தொடர்வதுடன் தவெக அரசு புதிய திட்டங்களையும் செயல்படுத்தும். தவெக அரசு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

சொந்த வரி வருவாய் வளர்ச்சி 12 சதவீதம் தான் சாத்தியம். திட்டம் அனுமதி பெறுவதற்கான ஊழல் தவெக அரசால் தடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் நிதிநிலை காரணம் காட்டி 28 மாதங்களுக்கு பின்னரே ஒரு திட்டத்தை நிறைவேற்றியது முந்தைய அரசு.

திட்டங்கள், அதன் பலன்களை மேம்படுத்தும் நோக்கில் தான் பெயர் மாற்றம், வெற்றி வீடு திட்டத்தில் முந்தைய ஆட்சி விட நிதி உயர்வு.

கடந்த ஆட்சியில் மேற்கொண்டுள்ள திட்டங்களை நகல் எடுக்காமல் பலன்களை மட்டும் மேம்படுத்தி உள்ளோம்.

பொதுமக்களும் பயனளிக்கும் திட்டங்களின் அறிவிப்பால் செலவினம் அதிகரித்துள்ளது. திமுக அரசு வழங்கிய டெண்டரில் உள்ள முறைகேடுகளை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com