கூட்டுறவு வங்கிகளில் நிலுவை பயிர்க்கடன் வசூல் முற்றிலுமாக தற்காலிக நிறுத்தம்- தமிழ்நாடு அரசு

சில விவசாயிகளிடருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையிலுள்ள தங்களது பயிர்க் கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
Published on: 
Summary

கூட்டுறவு சங்கங்களில் நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையிலுள்ள பயிர்க் கடன்கள் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அனுப்பப்பட்டு, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தவறாது கடைப்பிடிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

புகார்கள்

இந்நிலையில், சில விவசாயிகளிடருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையிலுள்ள தங்களது பயிர்க் கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே, அனைத்து விவசாயிகளின் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்வதுயாதனில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலுவையிலுள்ள பயிர்க் கடன் வசூலிப்பது தொடர்பாக கூட்டுறவு சங்கத்திலிருந்து எவரேனும் விவசாயிகளை தொடர்புகொண்டால், தொடர்பு கொண்ட கைபேசி எண் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை கூட்டுறவுத் துறையின் அதிகாரபூர்வ குறைதீர்வு எண்ணான (Official Grievance Redressal Number) 98840 00845 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com