

ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் கழுத்தில் காய்கறி மாலைகளை அணிந்து நூதன முறையில் அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாரிமுனை குறலகம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வு மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு பதுக்கலுக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் கே.பாலபாரதி கலந்து கொண்டார். மேலும் துறைமுகம் பகுதி செயலாளர் ஆர்.குமார், வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.டி.கிருஷ்ணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்வுக்கு காரணமான மாநில அரசின் தவறான போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் கழுத்தில் காய்கறி மாலைகளை அணிந்து நூதன முறையில் அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.