டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலி

சிகிச்சை பலனின்றி மாணவன் ரெமோ கிறிஸ்டோபர் எட்வின் பரிதாபமாக உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலி
Published on: 
Summary

திருமழிசை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது.

திருமழிசை, காவல்சேரி சாலை, ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் எட்வின் சாமுவேல் ராஜா. இவரது மகன் ரெமோ கிறிஸ்டோபர் எட்வின் (வயது18). தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக ரெமோ கிறிஸ்டோபர் எட்வினுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காகத் திருமழிசையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த போது மாணவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் ரெமோ கிறிஸ்டோபர் எட்வின் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமழிசை

திருமழிசை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. தேங்கி உள்ள மழைநீர், குப்பைகளை முறையாக அகற்றவும் கொசு ஒழிப்புப் பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும், மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X