

சென்னை:
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்! என்று கூறியுள்ளார்.