தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ்.பாபு- நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் விஜய்

விஎஸ் பாபு கடந்த 9 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
TVK MLA VS Babu- TN CM Vijay
Published on

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

9 நாட்களாக அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று முதலமைச்சர் விஜய் வி.எஸ்.பாபு உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

கொளத்தூர் தவெக எம்எல்ஏ விஎஸ் பாபுவை சந்தித்து, நலம் விசாரித்த விஜய் பின்னர் புறப்பட்டு சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com