

முதலமைச்சர் விஜய்யை பார்த்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்களிடம் பேசிய விஜய் உங்களை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார்.
முதலமைச்சர் விஜய் அவ்வப்போது அதிரடியாக அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரி, நெமிலிசேரியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.
இன்று திடீரென புழல் ஜெயிலில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். அவர் வருவதை கேள்விபட்டதும் ஜெயில் வாசலில் ஏராளமானவர்கள் திரண்டனர். முதலமைச்சர் விஜய் சென்ற கார் நேரடியாக ஜெயில் வளாகத்துக்குள் சென்றது. அங்கு அவரை சிறைத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
அதை தொடர்ந்து தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயிலுக்கு சென்றார். விஜய்யை பார்த்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்களிடம் பேசிய விஜய் உங்களை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து ஜெயிலின் மற்ற பகுதிகளையும் சுற்றிப்பார்த்து கைதிகளிடம் பேசி குறகைளை கேட்டார். பின்னர் அதிகாரிகளிடம் சிறைத்துறைக்கு என்னென்ன தேவை என்று கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து புழல் காவல்நிலையத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.