

தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும் என்று முதலமைச்சர் விஜய் பேசினார்.
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
* தங்களது உயிரை, வாழ்க்கையை இழந்து சுதந்திரம் வாங்கித்தந்த சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எனது தனிப்பட்ட வீர வணக்கங்கள்.
* கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்த மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.
* அடிமையாக இருப்பதை எதிர்த்து ஒன்றுசேரும்போது சாதி, மதம், இனம் அனைத்தும் உடைத்து நொறுங்கும். மதம், மொழி என அனைத்தும் உடைந்து நொறுங்கும் இடத்தில் கிடைப்பது தான் உண்மையான சுதந்திரம்.
* உடைந்து நொறுங்கும்போதுதான் சுதந்திரம் கிடைக்கும், அதை கெட்டியாகப் பிடித்து முன்னேறுகிறோம்.
* லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது த.வெ.க. அரசு செயல்பட்டு வருகிறது. வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.
* தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும்.
* பொது வாழ்வில் சமரம் இருக்கக்கூடாது, மக்கள் நலன் முக்கியம் என்ற அடிப்படையில் த.வெ.க. அரசு செயல்படுகிறது.
* அம்மா உணவகம் திட்டம், காலை உணவுத் திட்டத்தை இன்னும் மெருகேற்றி விரிவுபடுத்தி செயல்படுத்துகிறோம்.
* தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, கணினி மயமாக்கப்பட்ட நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளது.
* விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு நிதி தரப்பட்டுள்ளது.
* தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்.
* அரசின் வருமானம் தனிநபருக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது, லஞ்சம் லாவண்யம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
* தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக, உலகளவில் வளர்ந்த நாட்டுக்கு இணையாக உயர்த்த உறுதியேற்போம்.
* அரசு அலுவலகம் தேடி வரும் மக்களை அலையவிடாமல் அன்பாக கண்ணியமாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.