காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்
காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்
Published on

திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையத்துக்கு சிறந்த பேரூராட்சிக்கான விருதும், போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது.

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார். மேலும் விருது பெற்றவர்களின் விவரம்:-

* மாநில இளைஞருக்கான விருது இம்மானுவேல் நெல்சன், சரவணகுமார், நிர்மல் கதிரவேலுக்கு வழங்கப்பட்டது.

* மாநில இளைஞருக்கான விருதை பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி மகாதேவன், சிந்தா பெற்றுக்கொண்டனர்.

* கே.கே. நகர் அரசு மருத்துவனை மருத்துவர் திருநாவுக்கரசுக்கு சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டது.

* முதலமைச்சரின் நல் ஆளுமை விருது நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீருக்கு வழங்கப்பட்டது.

* கோவையைச் சேர்ந்த வீராங்கனை நவ்ஷீன் பானுசந்த் என்பவருக்கு கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

* முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை கோவை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலிக்கு வழங்கப்பட்டது.

* முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சதீஷ் பிரபு மற்றும் குழுவினருக்கு வழங்கப்பட்டது.

* கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமாருக்கு சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கான விருது.

* திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையத்துக்கு சிறந்த பேரூராட்சிக்கான விருதும், போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது.

* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சிருஷ்டி பவுண்டேஷன் சிறந்த நிறுவனத்துக்கான விருதைப் பெற்றது.

* திருவண்ணாமலை மாவட்டத்தின் பா.மணிமாறனுக்கு சிறந்த சமூகப் பணியாளருக்கான விருது வழங்கப்பட்டது.

* அதிகளவில் பணியமரித்திய சிறந்த நிறுவனத்திற்கான விருதை திருப்பூரின் SCM கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

* மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு முதலமைச்சர் விஜய் இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com