ஆசிய விளையாட்டில் வெண்கலம்: தமிழக பேட்மிண்டன் வீரருக்கு ரூ.30 லட்சம் பரிசு - முதலமைச்சர் விஜய்

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று மட்டும் இந்திய அணி 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
cm vijay
Published on
Summary

ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் நகோயா நகரில் நடந்து வருகிறது. நான்காம் நாளில் இந்தியா 1 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் வென்றது.

இதற்கிடையே, பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இதில் இந்தியா 1-3 என தோல்வி அடைந்தது.

அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.

ஒரே நாளில் 5 பதக்கம்

இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள் பெற்றுள்ளன.

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் ஆண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் வாழ்த்து

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் கூறியதாவது:

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் குழு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

அவரது திறமையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 'ELITE Sportsperson Scheme' திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வரும் ஹரிஹரனின் இந்த சாதனை, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.

விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும். ஹரிஹரன் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com