

சென்னை மாதவரம் பால் பண்ணையில் ரூ.152.26 கோடியில் கட்டப்படும் ஆவின் பால் பண்ணை நிலையத்தை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.
சென்னை மாதவரம் பால் பண்ணையில் 10 லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய பால் பண்ணைகள் கட்டப்படுகிறது.
மாதவரம் பால் பண்ணை பிரதான சாலையில் ரூ.152.26 கோடியில் 7 ஏக்கரில் கடந்த 2022 ஆண்டு முதல் கட்டப்படுகிறது.
இந்நிலையில் மாதவரத்தில் ரூ.2.23 கோடியில் கட்டப்பட்ட ஆவின் மாதிரி மத்திய ஆய்வக கட்டிடத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
இதையடுத்து மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகளையும் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து பார்வையிட்டார். ரூ.152.26 கோடியில் கட்டப்படும் ஆவின் பால் பண்ணை நிலையத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
மாதவரம் ஆவின் பால் பண்ணையில் நாள்தோறும் 4 லட்சம் லிட்டர் முதல் 4.5 லட்சம் லிட்டர் வரை பால் உற்பத்தி செய்து விநியோகிக்கப்படுகிறது.