லண்டனில் முதலமைச்சர் விஜய்-அஜித் பரிமாறிக்கொண்ட பரிசுகள் - புகைப்படங்கள் வைரல்

முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித் குமாருக்கு சிறப்பு நினைவு பரிசாக ரேஸ் கார் மாதிரியை வழங்கி கவுரவித்தார்.
Chief Minister Vijay-Actor Ajith
Published on

பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய நிகழ்வில் பங்கேற்று திரைத்துறையின் முன்னணி நடிகரும் ரேசருமான அஜித்குமாரின் கார் பந்தயப் பிரிவை தொடங்கி வைத்தார்.

உலக அளவில் கவனம் ஈர்த்துள்ள இந்நிகழ்வில் இரு நட்சத்திரங்களும் நேரில் சந்தித்து பரஸ்பர நினைவு பரிசுகளைப் பரிமாறி கொண்டது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பந்தயக் களத்தில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித் குமாருக்கு சிறப்பு நினைவுப் பரிசாக ரேஸ் கார் மாதிரியை வழங்கி கவுரவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனது மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும், நடிகர் அஜித் குமார் முதலமைச்சர் விஜய்க்கு பந்தய ஹெல்மெட்டை அன்பு பரிசாக வழங்கினார்.

திரையுலகில் பல ஆண்டுகளாக இருவேறு பாதைகளில் பயணித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜயும் அஜித் குமாரும், வெளிநாட்டில் அதுவும் ஒரு சர்வதேச விளையாட்டு நிகழ்வில் சந்தித்து கொண்டது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் மற்றும் விளையாட்டு தளங்களில் இரு பெரும் பிரபலங்களும் ஒருவரையொருவர் பரஸ்பரம் கௌரவித்துக் கொண்ட இந்தக் காட்சி, சர்வதேச அளவில் தமிழர்களின் பெருமையை உயர்த்தும் நிகழ்வாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com