விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி- முதலமைச்சர் அறிவிப்பு

இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி- முதலமைச்சர் அறிவிப்பு
Published on

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை சுமார் 9.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காரியாட்டி வட்டம், கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் மற்றும் தண்டியளேந்தலைச் சேர்ந்த கருப்பையா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் காரியாபட்டியைச் சேர்ந்த கணேசன், திருமுருகன், மாரியம்மாள் மற்றும் பேச்சியம்மாள் ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com