மேட்டூர் அணையில் மூழ்கியிருந்த தேவாலயகோபுரம் வெளியே தெரிய தொடங்கியது

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
மேட்டூர் அணையில் மூழ்கியிருந்த தேவாலயகோபுரம் வெளியே தெரிய தொடங்கியது
மேட்டூர் அணையில் மூழ்கியிருந்த தேவாலயகோபுரம் வெளியே தெரிய தொடங்கியது
Published on: 
Summary

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.62 அடியாக குறைந்ததால், நீரில் மூழ்கியிருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம் தற்போது வெளியே தெரிய தொடங்கியது. இதைக் காண சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பண்ணவாடி பரிசல் துறைக்கு வருகை தருகின்றனர்.

மேட்டூர் அணை கட்டியபோது நீர்த்தேக்க பகுதிகளில் இருந்த கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து அவர்கள் வழிப்பட்டு வந்த சாமி சிலைகளை அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர். அவர்கள் வழிப்பட்ட பண்ணவாடி பரிசல் துறையில் ஜலகண்டேசுவரர்கோவில், இரட்டை கோபுரங்களுடன் கூடிய கிறிஸ்தவ தேவாலயம், கீரைக்காரனூரில் உள்ள சோளப்பாடி வீரபத்திரன் கோவில், தேங்கல்வரை அருகே உள்ள மீனாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றை அப்படியே விட்டு சென்றனர்.

கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம்

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு கீழே சரிந்தால் பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டை கோபுரம் தண்ணீருக்கு வெளியே தெரியும். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதில் ஒரு கோபுரம் சாய்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 75.62 அடியாக குறைந்ததால் அணைக்குள் மூழ்கியிருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம் தற்போது வெளியே தெரிய தொடங்கியது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் தற்போது கிறிஸ்தவ ஆலய கோபுரம் வெளியே தெரிகிறது. இதைக்காண பண்ணவாடி பரிசல் துறைக்கு சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 75.62 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1854 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர்திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 37.73 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com