குழந்தைத் திருமணத்தைத் தடுப்போம்.. கனவுகளுக்குச் சிறகுகள் கொடுப்போம்!- அமைச்சர் ஜெகதீஸ்வரி

சமத்துவமான எதிர்காலத்தை உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
Minister Jagadeeswari
Published on: 

குழந்தைத் திருமண ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு, குழந்தைகளின் உரிமைகளையும், கல்வியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் அனைவரின் கடமையாகும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

குழந்தைத் திருமணமில்லா சமுதாயத்தை உருவாக்குவோம்!

குழந்தைத் திருமண ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு, குழந்தைகளின் உரிமைகளையும், கல்வியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் அனைவரின் கடமையாகும்.

குழந்தைப் பருவம் என்பது கல்வி கற்கவும், கனவுகளைக் காணவும், எதிர்காலத்தை உருவாக்கவும் உரிய பருவம். குழந்தைத் திருமணம் அவர்களின் கல்வி, உடல்நலம், சுயமரியாதை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தைப் பாதிக்கிறது.

பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்து, குழந்தைத் திருமணத்தைத் தடுத்து, ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான மற்றும் சமத்துவமான எதிர்காலத்தை உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

குழந்தைத் திருமணத்தைத் தடுப்போம்!

பெண் குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகுகள் கொடுப்போம்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X