தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், திருச்சியில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டிசம்பர் 1, 2026 அன்று திருச்சி மாவட்டத்திற்குச் செல்லவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத் திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகத் திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கட்டடத்தைத் திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவைத் தொடர்ந்து, முன்பு திட்டமிடப்பட்டிருந்த திருச்சி பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வருகிர டிச. 2 ம் தேதி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ப்பதற்காக திருச்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி, டிசம்பர் 1 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து திருச்சி மாவட்ட் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.