

பிரிட்டனில் நடைபெறும் 'Michelin Le Mans Cup' கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச கார் பந்தயத்தில் நடிகரும், ரேஸருமான அஜித்குமாரின் கார் பந்தயக்குழு பங்கேற்கிறது.
தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார். இன்று இரவு லண்டன் புறப்பட்டார்.
இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் இப்போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார்.
ஒரே சமயத்தில் முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணமும், நடிகர் அஜித்தின் கார் பந்தயமும் அமைந்திருப்பதால், இவ்விரு திரையுலக ஜாம்பவான்களும் நேரில் சந்தித்துக் கொள்ளும் இந்த தருணம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.