தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான மோதிரம் தயாரிப்பு வீடியோ வெளியீடு

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN CM Vijay
Published on: 

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான மோதிரம் தயாரிப்பு வீடியோவை முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாளை (28-ந்தேதி) தொடங்கி வைக்கப்படுகிறது.

த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் பெற்ற இத்திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

ரூ.755 கோடி ஒதுக்கீடு

இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 22-ந்தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் சார்பில் வழங்கப்படும் சீர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இத்திட்டத்துக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

107 அரசு மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு

தமிழகம் முழுவதும் உள்ள 107 அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டத்தின் கீழ் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மூலம் மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com