மதுராந்தகம் தொகுதி பிரச்சனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் விஜய்

கடல் போல் காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படவில்லை.
TN CM Vijay
Published on: 

மதுராந்தகம் தொகுதி பிரச்சினையை முதல்-அமைச்சர் விஜய் பட்டியலிட்டார்.

மதுராந்தகம் தொகுதி

மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் விஜய் பேசும்போது மதுராந்தகம் தொகுதி பிரச்சினைகளை பட்டியலிட்டார்.

அவர் பேசியதாவது:-

பட்ஜெட் கூட்டத்தொடரில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு என்று தனியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் கல்லூரி, மாணவ, மாணவியருக்கான சமூகநீதி விடுதிகளுக்கு சொந்தக் கட்டி டங்கள், சேமிப்புக் கிடங்கு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தாய்-சேய் நலக் கட்டிடம், புதிய உயர் அடுக்கு ஒருங்கிணைந்த வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடம், மாணவர்களுக்கான தங்கும் விடுதி, தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகள் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்க அறிவிக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.

ரூ.10 கோடியில், மதுராந்தகம் ஏரியில் உள்ள மதகு எண் 5 பாசன கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

75 ஆண்டுகளாகியும் செய்யப்படவில்லை

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சென்னை மாநகரை ஒட்டியுள்ள தொகுதியான மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.

இது என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகளுடைய நீண்ட நாள் கோரிக்கையான பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட தடுப்பணை அமைக்காமலும், ஏரிகளின் மாவட்டம் என்ற சிறப்புப் பெயர் இருந்தும் கூட ஏரிகளை புனரமைக்காமலும், கால்வாய்களை தூர்வாராமலும், சீர மைக்காமலும் வஞ்சித்துள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மணிகளை பாதுகாக்கும் வகையில் பெரிய கொள்ளளவு கொண்ட குடோன்கள் அமைக்காமலும், நிரந்தர கொள்முதல் நிலையம் ஏற்படுத்தாமலும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் கடந்த ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர்.

மகளிர் கல்லூரி

அச்சரப்பாக்கம் சென்னைக்கு மிக அருகாமையில் இருந்தும் பெண் கல்விக்கு முக்கியத்துவம் தராமல், மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவை இருந்தும் கடந்த ஆட்சியாளர்கள் அந்தக் கோரிக்கையை கிடப்பில் போட்டனர்.

அதேபோல் புக்கத்துறையில் உள்ள கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி அரசு மேல்நிலைப்பள்ளி உருவாக்கப்படவில்லை. மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படவில்லை.

நிறைவேற்றுவேன்

பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பெண்களுக்கும் தங்கும் விடுதி வசதி செய்து தரப்படவில்லை. இந்த பகுதி சென்னைக்கு அருகாமையில் இருந்தும், அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக இருந்தும், குடியிருப்புகள் தேவை இருந்தும், முந்தைய ஆட்சியாளர்கள் வீடற்றவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் போதுமான அளவில் கட்டித் தராமல் இருக்கும் நிலை உள்ளது.

கடல் போல் காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படவில்லை. தொகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் உங்களுடைய தேவையான அத்தியாவசிய வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com