

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து தேர்தலை எதிர் கொண்டனர். ஆளுங்கட்சியின் பண பலத்தைப் பயன்படுத்தாமல், முதலமைச்சரின் நான்கு மாத ஆட்சி மற்றும் அவரது செல்வாக்கை மட்டுமே முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டோம்.
சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்களின் 225-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவர்களது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், டி.கே. பிரபு, முகமது பர்வேஸ், மதன் ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களுக்கு விடுதலை போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றியவர்கள். அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து தேர்தலை எதிர் கொண்டனர். ஆளுங்கட்சியின் பண பலத்தைப் பயன்படுத்தாமல், முதலமைச்சரின் நான்கு மாத ஆட்சி மற்றும் அவரது செல்வாக்கை மட்டுமே முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டோம்
அ.தி.மு.க.வின் வலுவான பகுதிகளாகக் கருதப்பட்ட இடங்களில்கூட தங்களது வேட்பாளர்கள் கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று உள்ளனர். இதன் மூலம் முதலமைச்சரின் செல்வாக்கு அதிகரித்து உள்ளது.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தாங்கள் எடுத்த முடிவுகளின் விளைவுகளை சந்தித்து வருகின்றனர். எதிர்கால தேர்தல்களிலும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் முதல்வர் விஜய்க்கு எதிராக அணிசேர வாய்ப்புள்ளது. யாரையும் பழி வாங்குவதற்காக அரசு சட்டத்தைப் பயன்படுத்தாது. அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. யாருடைய கருத்துகளுக்கும் அரசு தடை விதிக்கவில்லை. கருத்துகள் வரம்பு மீறும்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார், பொது வெளியில் சட்ட வரம்புகளை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எடப்பாடி பழனிசாமி எந்த அ.தி.மு.க. அணியில் இருக்கிறார் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் தினந்தோறும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்திப் பேசுவதற்குப் பதிலாக, அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து முதலில் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். டி.டி.வி. தினகரனை பொதுச்செயலாளராக நியமிப்பது குறித்தும் அவர்கள் முடிவெடுக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிலேயே தலைவர் விஜய் தனது கொள்கை எதிரிகள் குறித்து தெளிவாக அறிவித்துள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் தலைவரின் கொள்கைகளில் துளியளவும் சமரசம் செய்யப்படாது. எத்தகைய சிக்கலான சூழல் ஏற்பட்டாலும் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது.
தமிழக மக்களின் நலனுக்குத் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அத்தகைய சந்திப்புகள் அனைத்தும் வெளிப்படையாகவே நடைபெறும். யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இந்தச் சந்திப்புகள் அமையும்.
தேவர் ஜெயந்தி விழாவில் முதலஅமைச்சரின் வருகை தொடர்பாக முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஒரு வாரமாக மாநிலத்தில் மின் நிலைமை சீரடைந்து வருகிறது. மின்சார கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் (டெண்டர்) கோரப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் மின்சார துறையின் நிலைமை முழுமையாகச் சீராகும்.
இவ்வாறு அவர் கூறினார்.