மாற்றுத்திறனாளி இளைஞர் வைத்த கோரிக்கை.. ஒரே நாளில் நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்!

தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு அவர் பாராட்டு சான்றுகளையும் வழங்கினார்.
CM Vijay
Published on: 

சென்னை கிண்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் நேற்று பணி நியமன ஆணை வழங்கினார்.

முன்னதாக, அங்கு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், புதிய திறன் பயிற்சி ஆய்வகங்களை திறந்துவைத்தார்.

தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு அவர் பாராட்டு சான்றுகளையும் வழங்கினார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைக்க Schneider நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் முதலமைச்சர் விஜயிடம் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மனு அளித்து கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், அரசு பணி வழங்குமாறு தன்னிடம் நேற்று கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளிக்கு முதல்வர் விஜய் அடுத்த நாளே பணி ஆணை வழங்கினார். அவருக்கு திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணி வழங்கப்பட்டது.

திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய பணிமனை உதவியாளர் பணிக்கான ஆணையை மாற்றுத்திறனாளி இளைஞர் தினேஷுக்கு முதல்வர் விஜய் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com