சிதம்பரம் அருகே சாலையில் படுத்திருந்த முதலை

குளத்தில் தண்ணீர் வற்றியுள்ளதால் அதிலிருந்து உணவைத்தேடி முதலை ஒன்று சாலைக்கு வந்தது.
சிதம்பரம் அருகே சாலையில் படுத்திருந்த முதலை
Published on: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த, கூடுவெளிச்சாவடி கிராமம் காட்டுமன்னார்கோவில் சாலையில் தனியார் மூலிகை மருத்துவமனை அருகே பெரிய குளம் உள்ளது.

முதலை

தற்போது குளத்தில் தண்ணீர் வற்றியுள்ளதால் அதிலிருந்து உணவைத்தேடி முதலை ஒன்று சாலைக்கு வந்தது. இதனையடுத்து மெயின் ரோட்டை கடந்து வந்த முதலை, பின்னர் நகராமல் சாலை ஓரத்திலேயே படுத்து இருந்தது.

வனத்துறை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அப்புதுரைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர், தாலுகா போலீசார் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இணைந்து முதலையை பாதுகாப்பாக பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் அதனை மீட்டு வக்காரமாரி ஏரியில் விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com