

மசாலாவில் ஊறவைத்து எண்ணெய்யில் பொறித்த சிக்கனுக்கு எப்படி சிக்கன் 65 என்று பெயர் வந்தது என்பது இன்றுவரை நிறைய பேருக்கு தெரியாது.
அசைவச் சாப்பாட்டில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் குழம்பு, மீன் பொறியல், நண்டுப் பொறியல் எனப் பல இருந்தாலும் தமிழகத்தில் அதிக அளவு விற்பனையாவது சிக்கன் 65 தான்.
ஆனால், மசாலாவில் ஊறவைத்து எண்ணெய்யில் பொறித்த சிக்கனுக்கு எப்படி சிக்கன் 65 என்று பெயர் வந்தது என்பது இன்றுவரை நிறைய பேருக்கு தெரியாது. ஏன், அதை விரும்பி ருசிக்கும் பலரும் அதை அறியாமல்தான் உள்ளனர்.
சரத்குமார் - வடிவேலு நடிப்பில் வெளியான திவான் படத்தில் கூட, சிக்கன் 65-ஐ வைத்து ஒரு காமெடி காட்சியே வரும். இந்த காமெடி காட்சியை பார்ப்பவர்களுக்கு கூட, ஆமா அது சரிதானே, சிக்கன் 65 என்ற பெயர் எப்படி வந்தது என கேள்வியும் எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள பிரபல அசைவ ஹோட்டல் இந்த கேள்விக்கு விளக்கம் தருகிறது. அந்த ஹேட்டலில் 1965-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு தினத்தன்று வாடிக்கையாளர்களுக்கு மசாலாவில் ஊறவைக்கப்பட்ட பொறித்த கோழிக்கறி துண்டுகள் பரிமாறப்பட்டு உள்ளது.
அதை சுவைத்த வாடிக்கையாளர் ஒருவர், இதற்கு பெயர் என்ன? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஹோட்டல் முதலாளி, சிக்கன் 65 என்று, புத்தாண்டை குறிப்பிட்டு கூறியிருக்கிறார். அன்று முதல் மசாலாவில் ஊறவைத்து பொறித்த கோழிக்கறியை சிக்கன் 65 என்று கூறுகிறோம்.