

செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் புகழ்பெற்ற ஒரே புனித யூதா ததேயு திருத்தலமான, சென்னை வாணுவம்பேட்டையில் அமைந்திருக்கும் திருத்தூதர் புனித யூதா ததேயு திருத்தலத்தின் 49-வது ஆண்டு அருள்விழா மற்றும் பங்கு குடும்பப் பெருவிழா கடந்த 22-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
மையச் சிந்தனை: அப்ப வடிவான இறைவன் நம் அனைவருக்கும் நிறைவாழ்வு அளிக்கும் தலைவன்
மாலை 6.00 திருஜெபமாலை, நவநாள் ஜெபம். 6.30மணி: ஆடம்பர கூட்டுத் திருப்பலி, சிறப்பு நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர்.
தலைமை: பேரருட் தந்தை ஞா. பாக்கிய ரெஜிஸ் (மறைமாவட்ட ஆயரின் மேனாள் பொது பதில் குரு&பங்குத் தந்தை, குரோம்பேட்டை).
உடன் இணைவோர்: சிறுவயதிலிருந்து வாணுவம்பேட்டை திருத்தலத்தின் மண்ணின் மைந்தர்களாக வளர்ந்து செங்கல்பட்டு மறைமாவட்ட குருவாக உயர்ந்த அருட்பணியாளர்கள் கிளாட்வின், ரவி ஜோசப், விக்டர் வினோத்.
மையச் சிந்தனை: ததேயுவின் தேர் பவனி துயர் போக்கும் அருள் பவனி
மாலை 6.00 மணி: திருஜெபமாலை மற்றும் புனிதரின் சிறப்பு நவநாள் ஜெபம்.
6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி, திருத்தேர் மந்திரிப்பு, வண்ணமயமான திருத்தேர் பவனி.
தலைமை: மேதகு ஆயர் டாக்டர் A. நீதிநாதன் (செங்கல்பட்டு மறைமாவட்டம்).
பங்கு குடும்பப் பெருவிழா & கொடியிறக்கம்
மையச் சிந்தனை: குடும்பங்களாய் சேர்ந்து வாழ்வோம், இறைவனோடு இணைந்து மகிழ்வோம்.
காலை 8.30 மணி (ஆடம்பரத் திருப்பலி): தலைமை: பேரருட் தந்தை பா. எஸ்தாக்கியுஸ் (செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயரின் பொது பதில் குரு).
காலை 11.00 மணி: ஆங்கிலத் திருப்பலி (Feast Holy Mass in English).
தலைமை: Rev. Dr. John Lourdusamy (Correspondent, St. Sebastian Mat. Hr. Sec. School, Pallavaram).
மாலை 6.30 மணி (ஆடம்பர நன்றித்திருப்பலி & கொடியிறக்கம்):
தலைமை: அருள்முனைவர் ஆரோக்கிய பிரான்சிஸ் ஸ்டாலின் (பங்குத் தந்தை, பிராட்வே).
நிகழ்வு: திருப்பலியின் முடிவில் திருக்கொடியிறக்கப்பட்டு இறைமக்களின் வணக்கத்திற்காக ஆலய திருப்பீடத்தில் வைக்கப்படும்.
இப்பெருவிழா ஏற்பாடுகளைத் திருத்தல அதிபர் மற்றும் பங்குத் தந்தை அருள்முனைவர் இ. அந்தோணி ராஜ், உதவி அதிபர் அருள்தந்தை அலெக்ஸ் ஸ்டாலின் குமார், அருட்சகோதரிகள், அன்பிய பொறுப்பாளர்கள், நிதிக்குழு உறுப்பினர்கள், இளையோர் இயக்கம், பக்த சபையினர் மற்றும் பங்கு இறைமக்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
விழா நாட்களில் வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளும் அருள் அடையாளங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்று வழக்கப்படி, இயேசு கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக அன்னை மரியா மற்றும் புனித அந்தோணியாரைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் அதிகளவில் வழிபடப்படும் சக்தி வாய்ந்த புனிதராகப் புனித யூதா ததேயு விளங்குகிறார்.
மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட, சாத்தியமற்ற நிலைகளையும் சாத்தியமாக்கும் வல்லமை படைத்த அருளாளராகப் புனித யூதா ததேயு போற்றப்படுகிறார். இவர் ஏசுவின் 12 சீடர்களில் ஒருவர் மற்றும் ஏசுவின் நெருங்கிய உறவினர் என்பதால் அவரின் முகச்சாயல் கொண்டவர், இவரின் திருவுருவதில் ஏசுவின் படத்தை நெஞ்சில் கொண்டவராய் தலை உச்சியில் தீப ஒளியில் காட்சி தருகிறார்.