

சென்னையில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து, நீரை வெளியேற்றும் பணிகளை தீவிரப்படுத்தினர். திரு.வி.க.நகரில் மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதையில் மழை பாதிப்புகளை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாக இருப்பதால் தமிழகம், புதுச்சேரியில் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தேங்கிய மழை நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னையில் மழை பாதிப்புகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை திரு.வி.க.நகரில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை அதிகாலையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழைநீர் தேக்கம் தொடர்பாக பெரம்பூர் சுரங்கப்பாதையையும் பார்வையிட்டார்.
அமைச்சர் அருண்ராஜை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் மழை பாதிப்புகளை இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். மழை பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் நீரை வெளியேற்றும் பணிகளை முடுக்கிவிட்டனர்.