சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த சென்னை ஆம்னி பஸ்- பயணிகள் படுகாயம்

பஸ் தலைகீழாக கவிழ்ந்து கிடந்ததாலும் பஸ்சுக்குள் உள்ளே சிக்கிய பயணிகளால் வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.
bus accident
Published on: 
Summary

விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்றிரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது.

இந்த பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஆம்னி பஸ் நள்ளிரவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது.

விபத்து

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அடுத்த பாதுர் பஸ் நிறுத்தம் அருகே ஆம்னி பஸ் வந்தபோது, பஸ் டிரைவரின் கவனக்குறைவால் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் சிக்கி கொண்டனர். நள்ளிரவு நேரம் என்பதாலும், பஸ் தலைகீழாக கவிழ்ந்து கிடந்ததாலும் பஸ்சுக்குள் உள்ளே சிக்கிய பயணிகளால் வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.

பஸ்சுக்குள் சிக்கிய பயணிகள்

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக திருநாவலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

காயம்

பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த பஸ்சில் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பஸ்சுக்குள் சிக்கியிருந்த ஒவ்வொருவராக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. திருநாவலூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வாகனங்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com