சென்னை காசிமேடு மீனவர்கள் போரட்டம் வாபஸ்

அமைச்சரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சென்னை காசிமேடு மீனவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது..
kasimedu fishers
Published on: 

சென்னை காசிமேட்டில் ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட மீனவர்களின படகுகளை விடுவிக்கவும் முரசு புயலால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி தர கோரி நடத்தப்பட்ட போரட்டமானது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மீனவர்களின் போராட்டம்

ஆந்திர அரசால் சிறைபிடிக்கப்பட்ட 8 மீன்பிடி படகுகளை விடுவிக்க வலியுறுத்தி காசிமேடு மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியிருந்தனர்.இதனால் வெறிச்சோடிய காசிமேடு மீன் மார்கெட் .முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

ஆந்திர காவல்துறையால் சிறைப் பிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரியும் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடியுள்ளது.

மீனவர்களின் கோரிக்கை

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லடசம், ஒருவருக்கு அரசு பணி தர வேண்டும் என் மீனவர்கள் சார்பாக கோரிக்கையானது விடுக்கப்பட்டது.

மேலும் ஆந்திர காவல்துறையால் சிறைப் பிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி காசிமேடு மீனவர்கள் அரசிற்கு கோரிக்கையாக முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

போராட்டம் வாபஸ்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். மீனவளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் காசிமேடு மீனவர்கள் உடனான தமிழ்நாடு அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மீனவர்கள் தர்ப்பினருடன் அமைச்சர் மரிய வில்சன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X