முக்கிய துறைகளின் செயலாளர்கள், 10 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா தன்னேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய துறைகளின் செயலாளர்கள், 10 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் 10 மாவட்ட கலெக்டர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* தமிழக உள்துறை செயலாளராக இருந்த அமுதா வருவாய்த்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழக உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தொழிலாளர் நலத்துறை செயலாளராக வீரராகவ ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ராணிப்பேட்டை கலெக்டராக சந்திரகலா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக எம்.அருணா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா தன்னேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தஞ்சை மாவட்ட கலெக்டராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* நாகை மாவட்ட கலெக்டராக ஆகாஸ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* அரியலூர் மாவட்ட கலெக்டராக ரத்தினசாமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* கடலூர் மாவட்ட கலெக்டராக சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* கன்னியாகுமரி கலெக்டராக அழகுமீனா ஐஏஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக சிம்ரன்ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com