சென்னை விமான நிலையம் எதிரே மரம் வெட்டிய எந்திரம் மீது பஸ் மோதி விபத்து

சக்திமான் என்கிற ரட்சத 3 சக்கர வாகனத்தை ஆதம்பாக்கத்தை சேர்ந்த நந்தகோபால் ஊழியர் இயக்கினார்.
சென்னை விமான நிலையம் எதிரே மரம் வெட்டிய எந்திரம் மீது பஸ் மோதி விபத்து
Published on: 
Summary

விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையம் எதிரே மீனம்பாக்கம் பகுதி ஜி.எஸ்.டி. சாலை ஒரத்தில் நேற்று இரவு எந்திரம் மூலம் மரங்களை வெட்டும் பணி நடைபெற்றது. அப்போது சக்திமான் என்கிற ரட்சத 3 சக்கர வாகனத்தை ஆதம்பாக்கத்தை சேர்ந்த நந்தகோபால் ஊழியர் இயக்கினார். சுமார் 40 அடி உயரத்தில் இருக்கும் மரக்கிளையை வெட்டும் பணி நடந்தபோது தாம்பரம் நோக்கி சென்ற மாநகர பஸ் திடீரென சக்திமான் வாகனத்தின் இடது பக்க டயரில் மோதியது.

விபத்து

இதில் சக்திமான் வாகனத்தின் டயர் பயங்கர சத்தத்துடன் கிழிந்து வாகனம் சாலையில் தூக்கி தள்ளப்பட்டது. இதில் அதிஷ்டவசமாக ஊழியர் நந்தகோபால் உயிர்தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் போக்குவரத்தை சரிசெய்து விசாரணை நடத்தினர்.

X