

திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி,மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் நீலகிரி தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி,மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை மாவட்ட பகுதிகள் மற்றும் நீலகிரி தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்வதுடன் பலத்த காற்றும் வீச கூடும். திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறு நாளும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 27-28 செல்சி யஸ்-ஐ ஒட்டியும் இருக்க கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.