தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நாளை காலை மத்திய-மேற்கு வங்கக் கடலில் 'தீவிர சூறாவளி புயலாக' வலுவடையக்கூடும்.
Rain
Published on: 

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தீவிரமடைந்து 'முரசு' எனும் சூறாவளியாக மாறியுள்ளது.

காலை 11.30 நேரப்படி, இது சென்னைக்கு கிழக்கே-தென்கிழக்கே சுமார் 560 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 660 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு கிழக்கே-தென்கிழக்கே 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 640 கி.மீ தொலைவிலும், ஓங்கோலுக்கு கிழக்கே-தென்கிழக்கே 680 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய-மேற்கு வங்கக் கடலில் 'தீவிர சூறாவளி புயலாக' வலுவடையக்கூடும்.

இரவு 10 மணி வரை

முரசு புயல் எதிரொலியால், தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ராணிப்பேட்டை, நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

X