3,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு: கர்நாடகா ஏற்குமா?

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை ஏற்று உத்தரவு.
காவிரி
காவிரி
Published on: 
Summary

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டத்தில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீர் பங்கீட்டை கொடுக்காமல் கர்நாடகா மறுத்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் முறையிடப்பட்டது.

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்த்தில் காவிரி ஒழுங்காற்றின் பரிந்துரையை ஏற்று, 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com