காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை 15 நாட்கள் மட்டுமே பாதுகாக்க முடியும் எனக் கூறுவதா?- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை 18 மாதங்கள் பாதுகாக்க வேண்டும்.
High court madurai bench
உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை
Published on

அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண்ணை மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் 36 மணி நேரம் சட்ட விரோதக் காவலில் அடைத்து வைத்தது தொடர்பான வழக்கில், சிசிடிவி பதிவுகளை சமர்பிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி..

அப்போது போலீஸ் தரப்பில் 15 நாட்கள் மட்டுமே சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் 18 மாதங்கள் பாதுகாக்க வேண்டும். CCTV கேமராக்களைப் பராமரிக்க வேண்டிய கடமை எஸ்.பி.க்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com